பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு: முதல்வர் எச்சரிக்கை!

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பாகிஸ்தான் நாடே கொண்டாடி வரும் நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு சிலரும் கொண்டாடியதாக கூறப்பட்டது

இந்த நிலையில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே மூன்று மாணவர்கள் உள்பட 4 பேர் மீது பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.