shadow

அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம். முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில் முதல்வராக சமீபத்தில் யோகி ஆதித்யநாத் பதவியேற்றுள்ளார்.

ஒரு சாமியார் மாநிலத்தின் முதல்வர் ஆவதா என்றும், யோகி ஆதித்யநாத் முதல்வரானால் மதவாதம் தலைதூக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அயோத்தில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகைள் வெகுவிரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.

அகிலேஷ் அரசு ராமாயண அருங்காட்சியகம் அமைக்கும் பணியை கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில் பாஜக அரசு பதவியேற்றா ஒருவாரத்திலேயே ராமாயண அருங்காட்சியகத்தை தொடங்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைக்கு பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதிகாசா நாயகனாக ராமருக்கு அயோத்தியில் அருங்காட்சியகம் அமைக்காமல் ஆப்கானிஸ்தானிலா அமைக்க முடியும் என பாஜக ஆதரவாளர்களும், இதுவொரு மதவாத நடவடிக்கை என்று பாஜக எதிர்ப்பாளர்களும் கூறி வருகின்றனர்.

Leave a Reply