shadow

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் விபரம் இதோ:

* சேலம் மாவட்டம் மேச்சேரி பேரூராட்சியில் 2, தெடாவூர் பேரூராட்சியில் 1, கொளத்தூர் பேரூராட்சியில் 1 என 4 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு.

* திருநெல்வேலி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் 8 திமுக வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளரும் ஒருவரும் போட்டியின்றி தேர்வு.

* திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு.

* ராமநாதபுரம் நகராட்சி 7வது வார்டில் பிரவீன் தங்கம் 29வது வார்டு காயத்ரி ஆகிய இரண்டு திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு. மேச்சேரி ஊராட்சியில் இரண்டு திமுக பேர்களும் தெடாவூர், கொளத்தூர் பேரூராட்சியில் தலா 1 என 4 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

* திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டில் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு.

* புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி 6வது வார்டில் சர்மிலா பானு, இலுப்பூர் பேரூராட்சி 5வது வார்டில் தமிழ் ராஜா ஆகிய 2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு .

* உடுமலை நகராட்சி 14வது வார்டில் திமுக வேட்பாளர் மும்தாஜ் போட்டியின்றி தேர்வு.

* பொள்ளாச்சி பெரிய நெகமம் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு;

* 8 பேர் திமுக வேட்பாளர்கள் என்பதால், பெரும்பான்மை பலத்துடன் பெரிய நெகமம் பேரூராட்சியை கைப்பற்றுகிறது திமுக.