shadow

chennai_rain_2619384h

வெள்ளம் என்பது வெறும் மழைநீர், ஆற்றுநீர் மட்டுமல்ல. கழிவுநீர், குப்பை போன்றவையெல்லாம் கலந்தே வீட்டுக்குள் நுழைகின்றன அல்லது சாலைகளில் தேங்கிக் கிடக்கின்றன. இந்த வெள்ள நீரும், வெள்ளநீர் உட்புகுவதால் ஏற்படும் மன அழுத்தமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலனில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்சினைகள் பலவும் ஒன்றுகூடி உடலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய தெளிவு கிடைக்கவில்லை.

தோல் பிரச்சினைகள்

காயத்தில் நோய்த்தொற்று: ஸ்டாபிலோகாக்கஸும் மற்றப் பாக்டீரியாவும் காயங்கள் வழியாக உடலில் தொற்றிக் கொள்ளலாம்.

காற்றில்

1. காற்றில் பரவும் வைரஸ்கள் அதிகரிக்கும்.

2.  பெட்ரோல், டீசல் மோட்டார்கள் அருகே கார்பன் மோனாக்சைடு அதிகமாக இருக்கலாம்.

3. எண்ணெய் பொருட்கள் ஆவியாக மாறியிருக்கும்.

4.  அச்சு வித்துகள் எனப்படும் நுண்ணுயிர் விதைகள் காற்றில் பரவி ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தாக அமையும்.

5.  பெருகும் கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவலாம்.

நீரில் மிதப்பவை

வாகனங்கள், சேமிப்புக் கிடங்குகளிலிருந்து வெளியேறிய பெட்ரோல், டீசல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

நீரில் கரைந்திருப்பவை

i)  பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள்.

ii) காரீயம், குரோமியம், கனஉலோகங்கள்.

iii) பென்சீன் உள்ளிட்ட புற்றுநோய் ஊக்கிகள்.

தோல் அழற்சி: வெள்ளநீரில் கால்கள் அடிக்கடி மூழ்குவதாலும், எரிச்சலை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் கலந்திருந்தாலும் தோலில் அழற்சி ஏற்பட்டுத் தடிப்போ, அரிப்போ ஏற்படலாம்.

சேற்றுப் புண்: தண்ணீர், சேற்றில் கால்கள் நீண்ட நேரம் ஊறினால் தோல் அழற்சியடைந்து சேற்றுப்புண் வர வாய்ப்பு மிக அதிகம்.

நீருக்கு அடியில்

சாக்கடைக் குழிகள், பள்ளங்கள் போன்றவை காயத்தையோ, தடுமாறி விழவோ, மூழ்கவோ வைக்கலாம்.

கலங்கியும், குழம்பியும் கிடக்கும் தண்ணீரில் கூர்மையான பொருட்கள் காலைப் பதம் பார்க்கலாம்.

நீருக்குள் இருக்கும் மின்கம்பி மின்கசிவை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.

நோய்க் கிருமிகள் எப்படி உடலுக்குள் நுழைகின்றன?

a)  சுவாசம் மூலம் நுரையீரலைப் பாதிக்கின்றன.

b) உணவு, தண்ணீரில் நோய்க் கிருமிகள் கலந்திருப்பதன் மூலம் உடலுக்குள் செல்லலாம்.

c) ஈ. கோலி, வயிற்று ஃபுளூ (நோரோ வைரஸ்), எலிக் காய்ச்சல் (லெப்டோபைரோசிஸ்), கிரிப்டோஸ்போரிடியம், கியார்டியா டாக்சோபிளாஸ்மாசிஸ் போன்ற நோய்க் கிருமிகள் இந்தப் பாதிப்புக்குக் காரணம்.

d) உடலில் ஏற்பட்ட வெட்டுக் காயங்கள், புண்கள் வழியாக ரத்த நாளங்களில் இவை கலந்துவிடுகின்றன.

Leave a Reply