19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 14ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் தொடங்க உள்ளது. இதற்கு அனைத்து நாட்டு அணிகளும் தயார்நிலையில் உள்ளன.

இந்த போட்டிகளுக்கு முன் சில பயிற்சி போட்டிகள் நடக்க இருக்கின்றன. நேற்று நடந்த இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியில் அபாரமாக விளையாடிய இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விஜய்தோல், முதல் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்திய அணி 45.5 ஓவர்களில் 209 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுக்களையும் இழந்தது. பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 48.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் சமரவிக்ரமா 82 ரன்களும், துமிந்து 48 ரன்களும், பெரேரோ 50 ரன்களும் எடுத்தனர்.

Leave a Reply