விசாகப்பட்டணத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா , ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாசில் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே,19 அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்தது. ஜாய்லார்டு 60, சிதும்பா 83, ஜாங்வே 34 ரன் விளாசினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா,19 அணி 28 ஓவரிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்து அபாரமாக வென்றது. பெய்ன்ஸ் 134 ரன் (89 பந்து, 14 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ஹெர்வாத்கர் 88, கேப்டன் விஜய் ஸோல் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த இந்தியா 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

Leave a Reply