shadow

மாலியில் ஐநா முகாம் மீது ராக்கெட் வீச்சுத் தாக்குதல். 3 பேர் பலி
mali
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாலி நாட்டின் தலைநகரில் அமெரிக்கர் ஒருவருக்கு சொந்தமான ஆடம்பர விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக 20 பேர் பலியாகிய அதிர்ச்சியில் இருந்தே இன்னும் அந்நாட்டு மக்கள் மீளாத நிலையில் நேற்று திடீரென மாலியில் உள்ள மாலியில் ஐநா முகாம் மீது ராக்கெட் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலியான சம்பவம் மாலியை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தகவலை ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஆலிவர் சல்காடோ உறுதிப்படுத்தியுள்ளார்.

மாலியின், வடக்கு கைடல் பகுதியில் உள்ள ஐநா அமைதி காப்பாளர்கள் முகாம் மீது நேற்று திடீரென ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 அமைதி காப்பாளர்களும் ஒரு ஒப்பந்ததாரரும் பலியாகினர். மேலும், காயமடைந்த 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆலிவர் சல்காடோ தெரிவித்தார்.

ஆடம்பர விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொடர்புடைய இருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதாகவும்
இதன் எதிரொலியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

English Summary:UN staffer killed in Mali attack on peacekeeping convoy

Leave a Reply