shadow

டுவிட்டர் டிரெண்டில் வந்தது ‘தெறி’யின் உலக லோக்கல் தர டிக்கெட்

theri2அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி விஜய் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு உற்சாகமான செய்தியை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.

‘தெறி’ படத்தின் ‘உலக லோக்கல் தர டிக்கெட்’ பாடல் ஒன்றின் வரிகள் வரும் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அவர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த பாடல் விஜய்யின் அறிமுகப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தெறி’ படத்தின் டைட்டில் போலவே இந்த பாடலின் வரிகளும் தெறிக்க வைக்கும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஜி.வி.பிரகாஷின் இந்த அறிவிப்பால் #ulagalocaltharaticket என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டுக்கு வந்துள்ளது.

Leave a Reply