shadow

விஜய்யின் ‘உலகலோக்கல் தரடிக்கெட்’ பாடல் ரிலீஸ் தேதி
local
சமீபத்தில் வெளியான தனுஷின் ‘மாரி’ படத்தில் தரலோக்கல் பாடல் ஒன்று இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் உலகலோக்கல் தரடிக்கெட் பாடல் ஒன்றை தான் விஜய் படத்திற்காக கம்போஸ் செய்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

புலி’ படத்தை அடுத்து விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு இது 50வது படம் என்பதால் இந்த படத்தின் பாடல்களை சூப்பர் ஹிட் ஆக்கவேண்டும் என்ற தீவிர முயற்சியில் உள்ளார். இந்த படத்திற்காக அவர் உலகலோக்கல் தரடிக்கெட் பாடலை கம்போஸ் செய்துள்ளதாகவும், இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பாடலுக்கு விஜய் இதுவரை இல்லாத அளவில் படுஸ்பீடாக டான்ஸ் ஆடி அசத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடலின் வரிகள் வரும் 17ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த பாடலை வரவேற்க இப்போதே விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *