shadow

‘தெறி’ படத்தில் உலக லோக்கல் தரடிக்கெட் பாடல்.

theri1விஜய்யின் 59வது படம் ‘தெறி’ என்று டைட்டில் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அடுத்தகட்டமாக வரும் டிசம்பர் 1ஆம் தேதி இந்த படத்தின் ஒரு பாடல் வரி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டரில் ‘தெறி’ படத்தின் விஜய்யின் அறிமுக பாடலின் வரிகள் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், இந்த பாடல் உலக லோக்கல் தர டிக்கெட் பாடலாக அனைவரையும் தெறிக்கவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ‘தெறி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் நாளில் சுமார் 15000க்கும் மேல் இணையதளங்களில் பகிரப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை ‘கபாலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பகிரப்பட்டதைவிட மிக அதிகம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply