உக்ரைன் மேயரை விடுவிக்க ரஷ்யா விதித்த நிபந்தனை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த இரண்டு வாரங்களாக கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் நாட்டிலுள்ள மெலிடோபோல் என்ற நகரத்தின் மேயராக இருந்த இவான் ஃபெடோராவ் என்பவர் ரஷ்ய படைகளால் கடந்த வாரம் பிடிக்கப்பட்டார்

இந்த நிலையில் மேயர் இவானை விடுவிக்க வேண்டும் என்றால் உக்ரைன் நாட்டினரால் பிடிக்கப்பட்ட ரஷ்ய படையினரை விடுவிக்க வேண்டும் என ரஷ்யா நிபந்தனை விதித்தது.

இதனையடுத்து தங்கள் வசமிருந்த 9 ரஷ்ய வீரர்களை உக்ரைன் விடுவித்ததை அடுத்து மெலோடோபல் மேயர் மீட்கப்பட்டு உள்ளார்.