யுகாதி பண்டிகைக்காக திருமலை திருப்பதிக்கு 2 டன் பூக்கள் பயணம்!

                            [carousel ids=”58265,58266,58267,58268,58269,58270,58271,58272,58273,58274,58275,58276″]

யுகாதி பண்டிகையை முன்னிட்டு, திருமலை, திருப்பதியில் நடக்கும் பூஜைகளுக்காக, சேலம் திருமலை திருவேங்கடமுடையான் புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், இரண்டு டன் பூக்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.திருமலை திருப்பதியில், நாளை, யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பயன் படுத்தும் வகையில், சேலம் திருமலை திருவேங்கடமுடையான் புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில் பூக்கள் தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி, நேற்று வன்னிய குல ஷத்திரியர் திருமண மண்டபத்தில் நடந்தது.இதில், மேரிகோல்டு, சம்மங்கி, அரளி ஆகிய பூக்கள், இரு டன் அளவுக்கு பக்தர்கள் வழங்கினர். இந்த பூக்களை, 300க்கும் மேற்பட்டோர் மாலைகளாக தொடுத்தனர். பின்னர் அவை அனைத்தும் லாரிகள் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பின், திருமலை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சேலம் திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Leave a Reply