shadow

மதுரையில் ஒரே ஒரு செங்கலை வைத்து இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என ஏமாற்றினர்.

அதே போல் திண்டுக்கல்லில் ஒரே ஒரு பலகையை வைத்து இதுதான் மாநகராட்சி என ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.

திமுக வேட்பாளர்களை ஆதரித்து என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது:

ஒற்றை செங்கல்லை வைத்து மதுரை #AIIMS என ஏமாற்றியது போல்,திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கான எந்த கட்டமைப்பையும் ஏற்படுத்தாமல் ஒரேயொரு பலகை வைத்து மாநகராட்சி என ஏமாற்றி வந்த அடிமைகளுக்கு சட்டமன்ற தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலிலும் பாடம் புகட்டுங்கள் என உதயநிதி பேசினார்.