திராவிட கட்சிகள் அல்லாத ஆட்சி: ரஜினியை விமர்சனம் செய்த உதயநிதி

திராவிட கட்சிகள் அல்லாத ஆட்சி: ரஜினியை விமர்சனம் செய்த உதயநிதி

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பி அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் திராவிட கட்சிகள் அல்லாத கட்சி தான், ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புதாக நடிகர் ரஜினி கூறியது, அவருடைய சொந்த கருத்து எனவும் இது மக்களின் கருத்து என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே ரஜினியை அரசியல்ரீதியாக பலமுறை விமர்சனம் செய்துள்ள உதயநிதி தற்போது மீண்டும் அவரை விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதியின் இந்த கருத்து ‘இதுவும் உதயநிதியின் சொந்த கருத்தே இது மக்கள் கருத்து அல்ல’ என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Reply