உதயநிதியை ஒப்பந்தம் செய்த ரஜினி படத்தயாரிப்பாளர்.

உதயநிதியை ஒப்பந்தம் செய்த ரஜினி படத்தயாரிப்பாளர்.

udayanidhiசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் ‘லைகா புரடொக்ஷன்ஸ்’ நிறுவனம், ஏற்கனவே விஜய் நடித்த ‘கத்தி’, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ போன்ற படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணணந்து ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்நிறுவனம் உதயநிதி நடிக்கவுள்ள அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இதுவரை அவரது சொந்த நிறுவனமான ‘ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ‘மனிதன்’ பட வெற்றிக்கு பின்னர் அவர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது லைகா நிறுவனத்தின் படத்தில் உதயநிதி நடிக்கவுள்ளார். இந்த படத்தை கவுரவ் நாராயணன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விக்ரம்பிரபு நடித்த ‘சிகரம் தொடு’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.