shadow

உதயநிதியின் அடுத்த பட டைட்டில் ‘சரவணன் இருக்க பயமேன்’

udayanidhi‘ஒருகல் ஒருகண்ணாடி’ முதல் ‘மனிதன்’ வரை தனக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது பிரபல இயக்குனர் எழில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சரவணன் இருக்க பயமேன்’ என்ற டைட்டில்தான் உதயநிதியின் அடுத்த படத்திற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி, ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply