விஜய் நடிக்க ஒப்புக்கொண்டதால்தான் நான் தயாரிப்பாளராக மாறினேன் என நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

இது கதிர்வேலன் காதல் வெற்றிக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி, தன்னுடைய தயாரிப்பு அனுபவம் குறித்து குறிப்பிட்டபோது, நான் தயாரிப்பாளராக மாறியதற்கு காரணமே விஜய்தான். விஜய் கால்ஷீட் கொடுக்காவிட்டால் படமே தயாரிக்க முன்வந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். கில்லி படம் பார்த்தபிறகு  நான் தயாரிக்கும் முதல் படம் விஜய் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, விஜய் பிசியாக இருந்தபோதிலு, காத்திருந்து அடம்பிடித்து அவரிடம் கால்ஷீட் வாங்கி ‘குருவி’ படத்தை தயாரித்ததாக கூறினார்.

மேலும் தயாரிப்பாளர் என்ற முறையில் நான் முதலில் தேர்வு செய்யும் ஹீரோ விஜய்தான். இரண்டாவது சூர்யா, அடுத்துதான் அஜீத். மேலும் தனுஷ், சிம்பு படங்களையும் தயாரிக்க ஆசை என்று கூறினார்.

மேலும் இந்த பேட்டியில் தனது கல்லூரி அனுபவங்கள், கிருத்திகாவுடன் ஏற்பட்ட காதல், நயன் தாராவுடன் நடித்த அனுபவம் ஆகியவற்றையும் ஜாலியாக பகிர்ந்துகொண்டார்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/O1ASaW” standard=”//www.youtube.com/v/f_94z69poqM?fs=1″ vars=”ytid=f_94z69poqM&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9847″ /]

Leave a Reply