கட்டணமில்லா சேவை

உபேர் அதிரடி முடிவால் மகிழ்ச்சி

கொரோனாவை எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்கள், சென்னை மாநகராட்சி அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சேவையை வழங்க உபேர் நிறுவனம் முடிவு செய்துள்ளதால் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே உலகம் முழுவதும் சுமார் 10 மில்லியன் இலவச ரைடு உபேர் நிறுவனம் அளித்து வருவதாகவும், அதில் 23 நகரங்களில் உள்ள 35 மருத்துவமனைகளும் அடங்கும் என்றும் உபேர் தெரிவித்துள்ளது.

கொரோனாவை ஒழிக்க சென்னை மாநகராட்சி 24 மணி நேரமும் பணி செய்து கொண்டிருப்பதால் உபேர் சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு இந்த சலுகையை வழங்குவதாகவும் உபேர் தெரிவித்துள்ளது.

உபேர் நிறுவனத்தின் இந்த உதவிக்கு சென்னை மாநகராட்சி நன்றி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply