shadow

விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவரது அடுத்த படமான ‘புரியாத புதிர்’ வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இணையதளங்களில் வெளியிட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘புரியாத புதிர்’ வெளியான அடுத்த வாரமே அதாவது செப்டம்பர் 8ஆம் தேதி விஜய்சேதுபதியின் மற்றொரு படமான ‘கருப்பன்’ வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஒவ்வொரு வருடமும் அதிக படங்களில் நடித்து வரும் சாதனையை பெற்று வரும் விஜய்சேதுபதி இந்த வருடமும் அந்த சாதனையை தக்க வைத்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply