மூதாட்டியை தரையில் கிடத்தி புகைப்படம் எடுத்த விவகாரம்: 2 பேர் பணி நீக்கம்
காப்பீடு திட்டத்தை பெற வேண்டி அரசு அலுவலகம் வந்த மூதாட்டி ஒருவரை அலட்சியப்படுத்தி தரையில் படுக்க வைத்த இரண்டு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ காப்பீடு திட்டத்தை பெறுவதற்காக வந்த மூதாட்டி ஒருவரை தேன்மொழி, திவாகரன் என இரண்டு ஊழியர்கள் அலட்சியப்படுத்தியதால் அந்த மூதாட்டி தரையில் படுத்துவிட்டார். இதுகுறித்த செய்தி ஒன்று தனியார் தொலைக்காட்சி சேனலில் வெளிவந்தது.
இந்த செய்தியை பார்த்தவுடன் இதுகுறித்து நடவடிக்கை எடுத்த சேலம் கலெக்டர் ரோஹினி, உடனடியாக அந்த மூதாட்டிக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்க உத்தரவிட்டத்துடன் பணியில் அலட்சியமாக இருந்த சம்பந்தப்பட்ட இரண்டு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.