சென்னையில் தொடர் மழை: 2 சுரங்கப்பாதை மூடல்!

சென்னையில் தொடர் மழை: 2 சுரங்கப்பாதை மூடல்!

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இரண்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் மழைநீர் அதிகம் தேங்கியுள்ளதால் கணேசபுரம் மற்றும் இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் போக்குவரத்திற்காக மாற்று வழி ஏற்பாடு செய்யப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதைக்கு பதிலாக பொதுமக்கள் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியே செல்லலாம். அதுபோலவே, கணேசபுரம் சுரங்கப்பாதையை பயன்படுத்தலாம். இவ்வாறு சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.