பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில். கேரள முதல்வர் கோரிக்கை

பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில். கேரள முதல்வர் கோரிக்கை

kerala cmபெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக பதட்டமான சூழ்நிலை இருப்பதால் அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கர்நாடக எல்லை வரை நடந்து வந்து அதன்பின்னர் தமிழகத்துக்கு வரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள கேரளாவை சேர்ந்தவர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவிற்கு திரும்ப இரண்டு சிறப்பு ரயில்களை இயக்கவேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது ‘ஓணம் பண்டிகைக்கு கேரளம் திரும்பும் வகையில் பலர், பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் இப்போதைய சூழலில் அவை பாதுகாப்பில்லை. எனவே கன்னூர் மற்றும் திருவனந்தபுரத்துக்கு வந்துசேரும் வகையில் பெங்களூருவில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்களை இயக்கக் கேட்டிருக்கிறோம். ரயில்வே அமைச்சரும் எங்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

கேரள முதல்வர் தவிர, மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, வி.எம். சுதீரன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஆகியோரும் கர்நாடக முதல்வரிடம் மலையாளிகளின் பாதுகாப்பு குறித்தும், அவர்களை அனுப்ப சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கேரள காவல்துறை, மலையாளிகள் கேரளத்துக்குத் திரும்பப் பயணிக்கும் சாலைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கர்நாடகாவின் மாண்டியாவுக்கு, 100 காவலர்களை அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply