தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 8 ஆனதால் பரபரப்பு

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 8 ஆனதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வரை நான்கு பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இரண்டு பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் கொரோனா தோற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது

இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் துபாயில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த இருவரையும் சேர்த்து தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர்களும் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply