அடுத்த 2 தினங்களுக்கும் விடுமுறையா? வானிலை மைய அறிவிப்பால் பரபரப்பு

தென் தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு தினங்கள், கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன், டெல்டா மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே மழை காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் விடுமுறையில் இருக்கும் நிலையில் நாளை முதல் மேலும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply