shadow

சூர்யா நடிக்கும் திரைப்படத்தை பாலா இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கன்னியாகுமரியில் தொடங்கியது.

இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மமிதா பைஜூ என்பவர் நடிக்கவுள்ளார்.

இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.