shadow

ஹேக்கர்கள் கைவரிசையால் டுவிட்டர் உள்பட முக்கிய இணணயதளங்கள் பாதிப்பு

twitter_2734143fஇணையதள உலகில் ஹெக்கர்களின் கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் இணையதளங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. சமீபத்தில் இந்தியாவில் ஹேக்கர்களின் கைவரிசை காரணமாக லட்சக்கணக்கான டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய டெபிட் கார்டுகளை வங்கிகள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் கிழக்கு அமெரிக்காவில் நேற்று டுவிட்டர், ஸ்பாட்டிஃபைவ் ரெடிட், வோஎக்ஸ் ஆகிய இணையதளங்களில் ஹேக்கர்கள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளனர். சமூக இணையதளம், ஒலிக்கான பிரத்யேக இணையதளம், விவாத தளம், செய்தித்தளம் ஆகிய முக்கிய தளங்களையே ஹேக்கர்கள் செயல்பட விடாமல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த தளங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் இதே இணையதளங்கள் ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் டுவிட்டர் போன்ற சமுக வலைதளங்கள் முடக்கப்படுவதை கண்டு உஷாரான சில முக்கிய இகாமர்ஸ் தங்கள் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்காவண்ணம் பாதுகாப்பு ஏற்படுகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply