திடீரென முடங்கியது டுவிட்டர்: அதிர்ச்சியில் பயனாளிகள்!

நேற்று நள்ளிரவில் திடீரென டுவிட்டர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியதக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் இணையதளம் நேற்று நள்ளிரவு திடீரென முடங்கியது.

இதன் காரணமாக இதன் மில்லியன் கணக்கான பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் டுவிட்டர் இணைய இயங்கத் தொடங்கியது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மணி நேரம் முடங்கியது என்றும், அதற்கு பயனாளிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது