இனிமேல் வொர்க் ப்ரம் ஹோம் தான்:

ஆபீஸ் யாரும் வரவேண்டாமென டுவிட்டர் இமெயில்

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வொர்க் ப்ரம் ஹோம் என்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம், தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்யும்படி சமீபத்தில் அறிவுறுத்தியது. இந்த நிலையில் ஒருசில ஊழியர்கள் தவிர அனைத்து ஊழியர்களும் இனிமேல் அலுவலகம் வரவேண்டிய அவசியம் இல்லை என்றும், நிரந்தரமாகவே வொர்க் ப்ரம் ஹோம் தான் என்றும் டுவிட்டர் நிறுவனர் ஜாக் அனைத்து பணியாளர்களுக்கும் இமெயில் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என்ற உண்மையை கடந்த மாதங்கள் நமக்கு உணர்த்தியுள்ளதால் அதனையே தொடர்ந்து பின்பற்றுவோம் என்றும் ஜாக் அந்த இமெயிலில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply