shadow

தொழில்நுட்ப கோளாறு. 10 நிமிடம் செயலிழந்த டுவிட்டர். பயனாளிகள் அதிர்ச்சி.
twitter
ஃபேஸ்புக்கை அடுத்து கோடிக்கணக்கானோர் உபயோகப்படுத்தும் சமூக வலைத்தளம் டுவிட்டர். இந்நிலையில் கடந்த வியாழனன்று இந்திய நேரப்படி, மாலை ஆறரை மணியளவில் திடீரென  டுவிட்டர் இணையதளம் 10 நிமிடங்கள் செயல் இழந்துபோனதால் டுவிட்டர் பயனாளிகள் பரிதவித்து போயினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக டுவிட்டர் இணையதளம் செயலிழந்து போனதாக கூறப்பட்டது.

டுவிட்டர் வலைதளம் செயலிழந்து போவது இதுவே முதல்முறை என்பதால் இந்த அதிர்ச்சியை டுவிட்டர் பயனாளிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை. பின்னர் டுவிட்டரின் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் உடனடியாக கோளாறை சரிசெய்து பத்து நிமிடங்களில் இணையதளத்தை இயங்க செய்தனர். இந்த பத்து நிமிடத்துக்கு டுவிட்டர் இல்லாத உலகில் ஏற்பட்ட தமது வாழ்க்கை அனுபவங்களை பயனாளிகள் உடனடியாக பகிர்ந்துகொண்டனர்.

அதில், ஒரு நபர் ‘டுவிட்டர் வலைதளம் சில நிமிடங்கள் செயலிழந்துபோனது. நான் பயந்துபோய்விட்டேன்! பிறகுதான் ஞாபகம் வந்தது நிஜ உலகம் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது’ என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply