கொரோனாவை விரட்ட புதிய முயற்சி

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த தொற்று குறித்த சந்தேகங்களை உடனடியாக தீர்க்கும் வகையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் டுவிட்டர் இந்தியா இணைந்து ’கோவிட் இந்தியா சேவா’ என்னும் டுவிட்டர் பக்கத்தை ஆரம்பித்துள்ளது.,

இந்த பக்கத்தில் பொதுமக்கள் கேள்விகளை டுவீட் மூலம் சம்பந்தப்பட்ட துறை மற்றும் அமைச்சகங்களிடம் கேட்கலாம் என்றும் தனிச்சிறப்பு முறையில் இந்த டுவிட்டர் பக்கம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுமக்கள் கொரோனா குறித்த சந்தேகங்களை தீர்வுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ட்விட்டர் பக்கம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply