shadow

முத்தலாக் விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்

சமீபத்தில் முத்தலாக் குறித்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையில் விரைவில் இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த மசோதா குறித்து ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

முத்தலாக் விவகாரத்தில் அனைத்து மாநில மொழி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி, அதன்மூலம் இஸ்லாமியர்களின் கருத்தை கேட்டு சட்டமாக்க வேண்டும். இந்த மசோதா அவசரகோலமாகவும், அலங்கோலமாகவும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது

இஸ்லாமிய மக்களின் சம்பிரதாயமான முத்தலாக் முறையில் பாதிப்போ, குறைபாடோ இருக்குமானால் அதனை அம்மதத்தினை தழுவிய மக்களின் கருத்தை கேட்டு, அதன்படி பாதுகாப்பு அம்சத்தை வழங்குவதுதான் ஏற்புடையதாக இருக்கும் என்று தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Leave a Reply