டிடிவி தினகரனின் கன்னிப்பேச்சில் இருந்தது என்ன?

டிடிவி தினகரனின் கன்னிப்பேச்சில் இருந்தது என்ன?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு திராவிட கட்சிகளை வீழ்த்தி வெற்றி பெற்ற டிடிவி தினகரன் நேற்று முதல் நாளாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். இந்த நிலையில் இன்று அவர் தனது கன்னிப்பேச்சை சட்டமன்றத்தில் பதிவு செய்தார்.

தனது முதல் பேச்சில் அவர் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னையில் முதல்வர் தலையிட்டு ஜெயலலிதாவின் அரசு தான் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.

Leave a Reply