ஆர்.கே.நகர் மக்களை அவமதிப்பதா? கமல்ஹாசனுக்கு தினகரன் கண்டனம்

ஆர்.கே.நகர் மக்களை அவமதிப்பதா? கமல்ஹாசனுக்கு தினகரன் கண்டனம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் பெற்ற வெற்றி பணத்தால் கிடைத்த வெற்றி என்று கிட்டத்தட்ட அனைவரும் விமர்சனம் செய்துவிட்டனர். இந்த செய்தியே பழைய செய்தியாகி போன நிலையில் தற்போது இதுகுறித்து கமல் கருத்து கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ஆகப்பெரிய களங்கம். தமிழகத்துக்கு, தமிழக அரசியலுக்கு, அவ்வளவு ஏன், இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம். அதுவும் வெளிப்படையாக நடந்த, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியை ஊழல் என்றுகூடச் சொல்லமாட்டேன். ஊழல் என்பது, பூசி மெழுகுவது போன்ற ஒரு விஷயம். இது அனைவரும் அறிந்த, ஊரறிய நடந்த குற்றம். இவ்வளவு வெளிப்படையாக நடக்கும் குற்றத்துக்கு, மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய சோகம். இது வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வீழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தினகரன், வாக்களித்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களை அவமதிக்கும் கருத்து இது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.