shadow

பிரதமரின் திட்டத்தில் 75 டன் தங்க நகைகளை டெபாசிட் செய்கிறதி திருப்பதி தேவஸ்தானம்

HY18TIRUMALA_1211939fபிரதமரின் தங்க சேமிப்பு திட்டத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய கோவில்கள் கிலோ கணக்கில் டெபாசிட் செய்து வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் 7.5 டன் தங்க நகைகளை டெபாசிட் செய்ய முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே இரண்டாவது பணக்கார கோவில் என்று கூறப்படும் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகை தருகின்றனர். திருப்பதி கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் ஆண்டு தோறும் சராசரியாக ஒரு டன் தங்கம் வரை வருமானம் கிடைத்து வருகிறது.

பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக வந்த இந்த தங்கத்தை பல்வேறு தேசிய வங்கிகளில் முதலீடு செய்து, அதற்கு வட்டியாக தங்கத்தையே தேவஸ்தானம் பெற்று வரும் நிலையில் பிரதமரின் தங்க சேமிப்பு திட்டத்திலும் தங்க நகைகளை டெபாசிட் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஹஐதராபாத் நகரில் சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் அவர்கள் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், ‘‘பிரதமரின் தங்க சேமிப்பு திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். இத்திட்டத்தில் 3 வகைகள் உள்ளன. குறுகிய காலம், நடுநிலை காலம், நீண்ட கால வைப்பு திட்டங்கள் உள்ளன. குறுகிய கால திட்டத்தில் டெபாசிட் செய்தால், வட்டியை தங்கமாகவோ அல்லது பணமாகவோ பெற்று கொள்ளலாம். எங்களுக்கு வட்டியாக தங்கம் மட்டுமே வேண்டும் என கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். உரிய பதில் கிடைத்தவுடன் பிரதமரின் தங்க சேமிப்பு திட்டத்தில் 7.5 டன் தங்க நகைகள் டெபாசிட் செய்யப்படும்’ என்று கூறினார்.

Leave a Reply