திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு யாரும் வரவேண்டாம்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் திருப்பதி – திருமலை இடையிலான இரண்டாவது மலைப்பாதையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கனமழை மற்றும் சூறாவளி காரணமாக திருப்பதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மலைக்கு பயணம் செய்யும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு திருமலைக்கு செல்லும் மலைப் பாதை மூடப்பட்டு உள்ளது.

இதனால் பக்தர்கள் திருப்பதிக்கு இன்னும் ஒரு சில நாட்களுக்கு வரவேண்டாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.