ரூ.3000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப்

WHO என்ற உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த ரூ.3,000 கோடி நிதியை நிறுத்திதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. *கொரோனா விவகாரத்தில் நடந்து வந்த மோதலையடுத்து WHOக்கு நிதி தருவதை நிறுத்தியது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தியதாக கூறப்படுகிறது

கொரோனா வைர​ஸ் பிரச்சனையை அரசியலாக்கினால் ​பிண​க்குவியல்களை காண நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது. கடந்த சில நாட்களுக்கு முன் சுவிட்சர்லாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய WHO அமைப்பின் பொது இயக்குநர் ​டெட்ராஸ்,’மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது தன் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைப் பற்றி கவலைப்படப்போவதில்லை எனவும், சீன ஆதரவு நிலைப்பாடு என்ற டிரம்பின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும், கொரோனா வைரஸ் பிரச்னையை அரசியலாக்கினால் மேலும் பிணக்குவியலை உலகம் காண நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த ரூ.3,000 கோடி நிதி நிறுத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply