shadow

டிரம்ப் மன்னிப்பு கேட்க 55 ஆப்பிரிக்க நாடுகள் வலியுறுத்து ஏன்? அதிர்ச்சி தகவல்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் கூறி வரும் நிலையில் சமீபத்தில் இனவெறி குறித்த அவருடைய பேச்சுக்கு ஆப்பிரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெளிநாடுகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதிகளாக பலர் குடியேறி வருவது குறித்த ஆய்வு கூட்டம் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய அதிபர் டிரம்ப், ‘ப்போது மிகமோசமான அருவருக்க தக்க நாடுகளில் இருந்து வருபவர்களை நாம் ஏன் வரவேற்க வேண்டும். அவர்களால் அமெரிக்க பொருளாதாரம் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றார்.

இதற்கு அவரது குடியரசு கட்சி மற்றும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆப்பிரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும் டிரம்பின் பேச்சுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

டிரம்பின் பேச்சில் இனவெறி தெரிகிறது. அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். எனது பேச்சில் உள்நோக்கம் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.