வடகொரிய அதிபரை சந்திப்பது எப்போது? டிரம்ப் விளக்கம்

வடகொரிய அதிபரை சந்திப்பது எப்போது? டிரம்ப் விளக்கம்

வடகொரியா அதிபர் கிங் ஜான் அன் அவர்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் சந்தித்து பேசுவது உறுதி செய்யப்பட்டது. இந்த சந்திப்பு இம்மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு குறித்த தேதியை இன்னும் மூன்று நாட்களில் அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், கிம் உடனான சந்திப்புகான நேரம் மற்றும் இடம் முடிவு செய்யப்பட்டு வருகிறது. அதுகுறித்த அறிவிப்பை இன்னும் 3 நாளில் வெளியிடுவேன் என தெரிவித்தார்.

இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என்றும் இந்த சந்திப்பில் இரு நாடுகளும் சமாதானம் மேற்கொண்டால் மூன்றாம் உலகப்போரை தவிர்த்துவிடலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சமீபத்தில் வடகொரிய அதிபரும் சீன அதிபரும் சந்தித்து பேசி தங்களிடையே உள்ள கருத்துவேறுபாடுகளை களைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.