shadow

மாலத்தீவு விவகாரம் குறித்து மோடியுடன் டிரம்ப் திடீர் ஆலோசனை

மாலத்தீவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு அதிபர் அப்துல்லா அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். மாலத்தீவின் உச்சநிதிமன்ற நீதிபதி உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பதட்டம் அதிகரித்துள்ளது.

அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருபக்கம் ராணுவம் ஒடுக்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் அரசுக்கு எதிராக போராட்டங்கள் பெரிதாக்கி கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகள் மாலத்தீவில் மீண்டும் அமைதி திரும்ப முயற்சிகள் எடுத்துவருகிறது

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனநாயக அமைப்புகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மாலத்தீவு அதிபரை இரு தலைவர்களும் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மோடியுடன் டிரம்ப் பேசிய தகவலை வெள்ளை மாளிகை அறிக்கையாக தெரிவித்துள்ளது.

Leave a Reply