shadow

இந்தியாவில் டிரம்ப் பெயரில் சொகுசு குடியிருப்பு: இன்று தொடங்கி வைக்கும் டிரம்ப் மகன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிபர் ஆவதற்கு முன்பே இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். அவரின் நிறுவனமான டிரம்ப் ஆர்கனைஷேசன் பல ஆண்டுகளாக இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில், டிரம்ப் நிறுவனத்தின் சார்பாக மும்பை, கொல்கத்தா, புனே மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் டிரம்ப் டவர்ஸ் என்ற பெயரில் சொகுசு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் குறித்து கண்காணிக்க டிரம்ப் ஆர்கனைசேஷனின் செயல் தலைவரும், டொனால்ட் டிரம்ப்பின் மகனுமான ஜூனியர் டிரம்ப் இன்று இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும், சர்வதேச வர்த்தக மாநாட்டிலும் ஜூனியர் டிரம்ப் பங்கேற்க உள்ளதாகவும், அதுமட்டுமின்றி மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் புதிய குடியிருப்புகளைப் தொடங்க உள்ளதாகதாகவும் கூறப்படுகிறது.

டிரம்ப் டவரின் குடியிருப்பில் ஒரு பிளாட்டின் விலை 1.5 மில்லியன் டாலர் என்பதும் இந்த டவரில் நீச்சல் குளம், அழகுநிலையம், உடற்பயிற்சி கூடம், உணவகம், வர்த்தக மையம் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply