அமெரிக்காவில் எச் 1-பி விசா: டிரம்ப் விதித்த புதிய அதிர்ச்சி நிபந்தனை
‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு வழங்கி வந்த ‘ஒர்க் பெர்மிட்’ முறையை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட்டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்து உள்ளதால் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்பட பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி வகித்த காலத்தில் ‘எச்-1’ பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா அளித்து, வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கியதால் அமெரிக்காவில் வேலை பார்க்கிற ஆண்களின் மனைவிமாருக்கும், பெண்களின் கணவர்களுக்கும் அங்கேயே வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இன்றைய டிரம்ப் அரசு முந்தைய அரசின் ‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு வழங்கி வந்த ‘ஒர்க் பெர்மிட்’ முறையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ் அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியிடப்படும் என அமெரிக்க அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானால் ஏராளமான இந்தியர்கள் உள்பட பல நாட்டினர் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.