shadow

7 லட்சம் அமெரிக்க இந்தியர்களுக்கு ஆபத்தா? டிரம்ப அரசு அதிரடி

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் வேலைக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க பொருட்களை மட்டுமே வாங்குங்கள்; அமெரிக்கர்களை மட்டுமே பணிஅமர்த்துங்கள்’ என்ற கொள்கையை நிறைவேற்ற டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியர்கள் உள்பட அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் கலக்கம் அடைந்துள்ளனர்

வரும் காலத்தில் அனைத்து துறைகளிலும், அமெரிக்கர்களை மட்டுமே பணியமர்த்தும் நோக்கில், டிரம்ப் அரசு, புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த பரிசீலனை செய்து வருகிறது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்தியர்கள் உள்பட லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் பணி இழக்கும் நிலை உருவாகும். அமெரிக்காவில் இந்தியர்கள் மட்டுமே சுமார் 7 லட்சம் பேர் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்க அரசு எடுத்து இந்த நடவடிக்கைகளை, இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதுகுறித்து தக்க சமயத்தில் அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தையை இந்திய அரசு நடத்தும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply