அமெரிக்க அதிபரின் அதிரடி அறிவிப்பு
H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு இறுதி வரை H-1B மற்றும் H-4 விசாக்கள் வழங்குவதை தடை செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது திடீரென அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு சொந்த நாடு திரும்பியவர்கள் மீண்டும் அதே வேலைக்கு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு H-1B விசா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அமெரிக்கா வரும் ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் H -4 விசா வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
வரும் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரவுள்ளதை அடுத்தே இந்த தளர்வுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது என்று கூறப்படுகிறது