shadow

டிரம்ப் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது. கலிபோர்னியா மாணவர்கள் போராட்டம்

1அமெரிக்க அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் மீறி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் விரைவில் புதிய அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் அவரது வெற்றிக்கு பல இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கலிபோர்னியா சான்டா பார்பரா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். எங்களுடய ஜனாதிபதி டிரம்ப் இல்லை, அவர் எங்களுக்கு தேவை இல்லை’ என்று முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களூம் வெஸ்ட்வுட் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அமைதியான முறையில் அகிம்சை முறையில் தங்களது ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும், டிரம்ப் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமே தங்களுடைய நோக்கம் என்றும் போராட்டம் செய்த மாணவர்கள் கூறினர்.

Leave a Reply