shadow

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிபெய்டு திட்டங்கள் 30 நாட்களுக்கு வேலிடிட்டி, இருந்த நிலையில் தற்போது 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் பிரிபெய்டு காலத் திட்டத்தை 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமென டிராய் உத்தரவிட்டுள்ளது.

ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் 30 நாட்கள் வேலிடிட்டிக்கு பதிலாக 28 நாட்கள் வேலிடிட்டி என வைத்துள்ளன.

இதனால் பிரிபெய்டு பயனாளிகள் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு 28 நாட்களுக்கு பதிலாக 30 நாட்கள் வேலிடிட்டி திட்டமொன்றை கண்டிப்பாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.