shadow

ரூ.186 கோடி மதிப்பு தங்க குடங்கள் காணவில்லையா? திருவனந்தபுரம் அரச குடும்பத்தினர் வேதனை

Sri Padmanabhaswamy templeசுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் நிர்வாக கணக்கை ஆய்வு செய்த மத்திய கணக்கு தணிக்கையாளர் குழு ரூ.186 கோடி மதிப்பிலான தங்க குடங்களை காணவில்லை என நேற்று குழு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால் இதுகுறித்து எங்களிடம் எவ்வித விளக்கமும் தணிக்கையாளர் குழு விளக்கம் கேட்கவில்லை என்று திருவனந்தபுரம் அரச குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரச குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: பத்மநாபசாமி கோயிலில் நிதி முறைகேடு நடந்திருப்பதாகவும் ரூ.186 கோடி மதிப்பிலான தங்க குடங்கள் காணாமல் போயிருப்பதாகவும் ஊடக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரிகளிடமோ, எங்களிடோமோ விளக்கம் கேட்காமல் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மன வேதனை தருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கோவில் நிர்வாகத்தில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து சுப்ரீம் கோர்ட் நிர்வாகக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த நிர்வாகக்குழுவின் அறிக்கைதான் நேற்று தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply