shadow

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை த்ரிஷா: பரபரப்பு தகவல்

நடிகை த்ரிஷாவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்

நடிகை த்ரிஷா சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்தபோது அவர் கால் தவறி கீழே விழுந்து விட்டதாகவும் அதனால் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது

இதனை அடுத்து சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு த்ரிஷா நாடு திரும்பி விட்டதாகவும் அங்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகை த்ரிஷா சிகிச்சை பெறும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது