புதிதாக டிசைன் செய்த திரிபுரா மெக்கானிக்

நாடு முழுவதும் காரணம் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது

ஒவ்வொரு மாநில அரசும் தங்களுடைய மாநில மக்களுக்கு சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திரிபுராவில் சேர்ந்த பார்த்தா சாஹா என்ற ஆட்டோ மெக்கானிக் சமூக இடைவெளியுடன் கூடிய பைக் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்

பேட்டரியில் இயங்கும் இந்த பைக்கில் ஓட்டுபவர்களும் பின்னால் உட்கார்ந்து இருப்பவருக்கும் இடையே சில அடி நீண்ட இடைவெளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சமூக இடைவெளியுடன் கூடிய பைக் தான் இனி வருங்காலத்தில் பரபரப்பாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்த பைக்கை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீது ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்

Leave a Reply