சொர்க்கவாசல் காண யாரும் வரவேண்டாம்: சென்னை பார்த்தசாரதி கோயில் நிர்வாகம்

இன்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் சென்னை பார்த்தசாரதி கோவிலுக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரவில் யாருக்கும் அனுமதி இல்லை என்றும், எனவே இரவில் யாரும் வரவேண்டாம் என்றும் சென்னை பார்த்தசாரதி கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் விஐபி கட்டளைதாரர்கள் யாரும் சொர்க்கவாசலை காண ஜனவரி 13-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை மட்டுமே அனுமதி.

சொர்க்கவாசல் காண வரும் பக்தர்கள் தமிழக அரசின் கொரோனா வைரஸ் வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும்.