தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கான தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், டி.கே.ரங்கராஜன், வசந்தி ஸ்டாலின், அமீர் அலி ஜின்னா ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. காலியாகும் இவர்களின் பதவிக்கு வேட்புமனு தாக்கல் வரும் 21ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. திமுகவின் சார்பில் திருச்சி சிவா மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

ஒரு மாநிலங்களவை வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமெனில் அவருக்கு 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. 23 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கொண்ட திமுக வேட்பாளர் திருச்சி சிவா வெற்றி பெற வேண்டுமெனில் காங்கிரஸ் அல்லது தேமுதிக ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி இல்லை என்று கறாராக கருணாநிதி சமீபத்தில் தெரிவித்துவிட்டதால் தேமுதிக ஆதரவு தரும் என்ற நம்பிக்கையில் வேட்பாளரை அறிவித்துள்ளார் கருணாநிதி என தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஐந்து இடங்கள் போட்டியின்றி தேர்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply